1958ஆம் ஆண்டு தான் அம்பத்தூர் சைக்கிள் தொழிற்சாலை நோக்கி பாலைய நாட்டு இளைஞர்கள் வந்த வண்ணமிருந்தனர். அதன் தொடர்ச்சியாக அம்பத்தூர், ஆவடி, திருவொற்றியூர் ஆகிய இடங்களுக்கு தொழில் இலக்காக நம்மவர்கள் மாதந்தோறும் வந்தனர், அப்படி வந்தவர்களில் 90 சதவீதம் பேர் சிவத்திரு S.PR. இராமசாமி அவர்களின் சிபாரிசுக் கடிதத்தின் மூலமும், மற்றோர் கொத்தரி சிவத்திரு சித.சோலைமலை அம்பலம்,பள்ளத்தூர் சிவத்திரு ஆ.லெ.சண்முகம் அவர்கள் ஆகிய இருவரின் சிபாரிசிலும் வேலை வாய்ப்பு பெற்று தங்கள் உழைப்பின் திறமையால் உயர்ந்து வரும் காலக்கட்டத்தில், நம்மைப போலவே வேறு பல ஊர்களில் இருந்து இங்கு வந்து பல தொழிற்சாலைகளில் பணிபுரிந்த அன்பர்களும் இணைந்து தென்னவர் மன்றம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கினர். காலப்போக்கில் அது செயல்படவில்லை.
நம் சமுதாயத்தில் ஒவ்வொரு முறைகளுக்கும் அவரவர் வசதிகளுக்கேற்ப செய்முறைகளை செய்து வருகின்றனர். மேலும் எந்த முறைக்கு என்ன செய்வது என்பது நிறைய பேருக்குத் தெரியவதில்லை. எங்கள் அறிவுக்கு எட்டிய வகையில் பல பேரின் ஆலோசனைகளைக் கேட்டு முறைகளைப் பற்றி விபரம் சேகரித்துள்ளோம்...