பாலைய நாட்டு வல்லம்பர் பேரவை. சென்னை.
1958 ஆம் ஆண்டு தான் அம்பத்தூர் சைக்கிள் தொழிற்சாலை நோக்கி பாலைய நாட்டு இளைஞர்கள் வந்த வண்ணமிருந்தனர். அதன் தொடர்ச்சியாக அம்பத்தூர், ஆவடி, திருவொற்றியூர் ஆகிய இடங்களுக்கு தொழில் இலக்காக நம்மவர்கள் மாதந்தோறும் வந்தனர், அப்படி வந்தவர்களில் 90 சதவீதம் பேர் சிவத்திரு S.PR. இராமசாமி அவர்களின் சிபாரிசுக் கடிதத்தின் மூலமும், மற்றோர் கொத்தரி சிவத்திரு சித.சோலைமலை அம்பலம்,பள்ளத்தூர் சிவத்திரு ஆ.லெ.சண்முகம் அவர்கள் ஆகிய இருவரின் சிபாரிசிலும் வேலை வாய்ப்பு பெற்று தங்கள் உழைப்பின் திறமையால் உயர்ந்து வரும் காலக்கட்டத்தில், நம்மைப போலவே வேறு பல ஊர்களில் இருந்து இங்கு வந்து பல தொழிற்சாலைகளில் பணிபுரிந்த அன்பர்களும் இணைந்து தென்னவர் மன்றம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கினர். காலப்போக்கில் அது செயல்படவில்லை.
நமது இளைஞர்கள் 13 பேர் வேலை நேரம் தவிர்ந்த நேரங்களில் உள்ள நேரத்தை சமுதாயத்திற்கென செலவிட எண்ணி நமக்கென ஒரு இளைஞர் அமைப்பை 1984ஆம் ஆண்டு
சென்னையில் துவக்கிட முயன்றனர். அவர்கள் பள்ளத்தூர் சிவத்திரு. லெ .சண்முகம், கொத்தரி சிவத்திரு
K.K.பாலாஜி, மற்றும் திருவாளர்கள் மணச்சை முரு. சோலைமலை, பள்ளத்தூர் S.முத்துராமன்,
V.சபாரத்தினம், S.மனோகரன் , பாலையூர் RM.வரதராஜன், கொத்தரி RM.K.கணேசன், உலுப்பகுடி
K. இராஜாராம், காரைக்குடி P.மனோகரன், S.சதீஷ்குமார், நேமத்தான்பட்டி T. அழகு. இதற்கு
சில அன்பர்கள் தென்னவர் மன்றம் போன்ற அமைப்புகள் நிலைத்து நிற்காததை மேற்கோள் காட்டினர்.
இந்த இளைஞர்கள் நமது சமுதாயத்தை சேர்ந்த பெரியவர்களை சந்தித்து ஆலோசனை
நடத்தியதில் பாலையூர் சிவத்திரு ஆ.இராமசாமி அவர்கள், நேமத்தான்பட்டி சிவத்திரு S.கணபதி
சேர்வை அவர்கள், பள்ளத்தூர் சிவத்திரு மா.பெரி. சோலையன் அவர்கள், பள்ளத்தூர் திரு.சோலை.
இராமச்சந்திரன் அவர்கள், கோட்டையூர் சித.அருணாசலம் அவர்கள், பள்ளத்தூர் திருC.வெள்ளைச்சாமி
அவர்கள், சுப.சண்முகம் அவர்கள், நேமத்தான்பட்டி திரு K.தில்லைநாதன் அவர்கள், கொத்தரி திரு.KR.
கிருஷ்ணன் அவர்கள் போன்ற அன்பர்கள் இளைஞர்களுக்கு ஊக்கம் ஊட்ட இளைஞர்களுக்கென துவக்க
எண்ணிய அமைப்பு அனைவருக்குமான அமைப்பாக தொடக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான முதல்
கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
முதல் கூட்டம் அம்பத்தூர, வரதராஜபுரம், No:19, G.N.G. தெருவில் இருந்த மாடியில் நடந்தது. அதில் 40 பேர் கலந்து கொண்டனர். இரண்டாம் கூட்டம் அம்பத்தூர, வரதராஜபுரம, ஹரி கிருஷ்ண நாயுடு
தெருவில் இருந்த மாடி ஹாலில் நடைபெற்றது. அதில் 60 பேர் கலந்து கொண்டனர். இந்த இரண்டாம் கூட்டம் சென்னையில் வல்லம்பர் பேரவை ஏற்பட வழி வகுத்தது.
இந்த கூட்டத்தில் திரு. சோலை . இராமசந்திரன் அவர்கள் நமது தலைவர் ஆகவும், சிவத்திரு ஆ.இராமசாமி மற்றும் திரு. சீனி . சோலைமலை அவர்கள் துணை தலைவர்கள் அவர்கள் ஆகவும், திரு முரு. சோலைமலை செயலாளர் அவர்கள் ஆகவும், திரு முத்து சுப்ரமணியன் அவர்கள் ஆடிட்டர் ஆகவும் திரு. பெரி. முத்துக்குமார் மற்றும் சுப. சண்முகம் இணை அவர்கள் செயலாளர்கள் ஆகவும், சிவத்திரு லெ . சண்முகம் அமைப்பு செயலர் அவர்கள் ஆகவும் திரு ச. ஆவுடையப்பன் அவர்கள் இளைஞர் அணி தலைவர் ஆகவும், திரு சதீஷ் குமார் அவர்கள் இளைஞர் அணி செயலாளர் ஆகவும், சிவத்திரு K.K பாலாஜி மற்றும் திரு S.மனோகரன் அவர்கள் இளைஞர் அணி இணை செயலாளர்கள் ஆகவும் , திரு RM.சோமசுந்தரம் குரோம்பேட்டைக்கும், திரு C.இராமசந்திரன் அவர்கள் திருவெற்றியூருக்கும்,திரு L.சோலைமலை அவர்கள் திருவான்மியூருக்கும் , திரு S.குமரப்பன் அவர்கள் ஈக்காட்டுதாங்கலுக்கும், திரு L.பெருமாள் கதிர்வேடுவுக்கும் வட்டாரப் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிவத்திரு S.PR. இராமசாமி அவர்கள் கௌரவத் தலைவராகவும், சிவத்திரு ஆ.பெ. இலட்சுமணன் அம்பலம் அவர்கள் கௌரவ ஆலோகராகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டனர்.
நமது இலட்சினையாக இரு யானைகளை வில்லாக்கி வெற்றி வேலின் மத்தியில் அன்னையின் அருட்சின்னமான மதுக்குடத்தோடு, வில்லுக்குள் ஒருவில் வடிவம் ஆறு இதழ் கொண்டு மலர்ந்த தாமரை அமைப்பில் உருவாக்கப்பட்டது. வல்லம்பர்கள் வில்லாதி வில்லர்களாய், வில்லிலிருந்து விடுபட்ட வீறு கொண்ட அம்புபோல் ஆக்கங்கள் பெற வேண்டும், அதுவும் புறப்படுகின்ற இடமும் இலக்கும் ஆறுமுக நோக்கோடு அமைய வேண்டி ஆறு இதழ்கள் அமைக்கப்பட்டது.
1. சமுதாய உணர்ச்சி
2. மனிதநேய மகிழ்ச்சி
3. ஒற்றுமை
4. பண்பாடு
5. கல்வி வளர்ச்சி
6. சுயதொழில் முயற்சி
என்ற ஆறு குறிக்கோள்கள் இலச்சினையாக்கப்பட்டது.
தனித்தியங்கும் நமது சமுதாய நோக்கோடு நம் சமுதாய வளர்ச்சியின் அடிப்படையில் 1984 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 16 ஆம் நாள் நமது பேரவை தொடங்கப்பட்டது. ுவக்கவிழாத் தலைவராக கர்நாடக இசையில் புலியாய் திகழ்ந்த டைகர் வரதச்சாரியின் சீடரான வெளிநாடுகளிலும் வெற்றிக்கொடிநாட்டிய நம் சமுதாயத்தில் "வாராது வந்திருந்த மாமணி" கர்நாடக இசை உலகின்
முடிசூடா மன்னராய் திகழ்ந்த கற்பக சித்ரா பிலிம்ஸ் உரிமையாளர் காரைக்குடி சிவத்திரு
M.மணிராஜன் அவர்கள் தலைமை ஏற்று பள்ளத்தூர் சிவத்திரு ஆ.பெ. இலட்சுமணன்
அம்பலம் அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்க முதல் உரையாக சிவத்திரு S.PR.. இராமசாமி அவர்கள் உணர்ச்சிப் பெருக்கோடு ஆனந்த கண்ணீர் மல்க ஆற்றிய பேருரை அனைவரையும் ஈர்த்தது.
சிறப்புரையாக, முன்னாள் காவல் துறை ஆணையர் சிவத்திரு பொன். பரமகுரு அவர்களும், பேராசிரியர் டாக்டர் .அய்க்கண் அவர்களும் வெகு சிறப்பாக பேசினார்கள், விவேகானந்தா கல்லூரி தமிழ்த்துறை தலைவர் டாக்டர் இரா. சேது அவர்களும், தமிழ்நாடு தேவர் பேரவைப் பொதுச் செயலாளர் திரு டாக்டர் வி. ராமகிருஷ்ணன் அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள்.
கோட்டையூர் திரு.தெய்வமணி B.E (இன்ஸ்பெக்டர் ஆ·ப் ·பாக்டரீஸ் (ஓய்வு) ) அவர்கள்,
காரைக்குடி டாக்டர் S. வள்ளியப்பன் அவர்கள், பாங்க்காக் ஆசிய விளையாட்டுப்
போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்கள் வென்ற அர்ஜுனா விருது பெற்ற
பாலையூர் திரு R. ஞான சேகரன் அவர்கள் போன்ற பெருமக்கள் வாழ்த்துரை வழங்க அன்றைய துவக்க விழா இனிதே நிறைவு பெற்றது.
எறும்பூறக்கல்லும் தேயும் என்பதற்கேற்ப நமது பயணம் மிக வேகமின்றி மித வேகத்தில் செல்கிறது. பாலைய நாட்டு வல்லம்பர் பேரவை தொடங்கிய ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மது ஆண்டு விழாவை சென்னை வாழ் நம் சமுதாயத்தினர் வ்வொருவரும் கலந்து கொண்டு நமது குழந்தைகளின் கல்வி, விளையாட்டு மற்றும் கலைத் திறமைகளை பாராட்டும் மற்றும் கல்வி, விளையாட்டு, அரசியல்,தொழில், சமுதாய மற்றும் கலைத் ுறைகளில் உள்ள நமது சமுதாயத்தினரை பாராட்டும் மற்றும்நம் சமுதாயத்தை சேர்ந்த அனைவருடனும் கலந்து அளவளாவி உணவு ண்ணும் நாளாக சிறப்புடன் கொண்டாடுகிறோம்.
ஆண்டு தோறும் நமது பேரவையின் வரவு செலவுக் கணக்கு பொதுக் கூட்டத்தில் ப்படுகின்றது. நமது பேரவையின் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகமாகவும், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற நகரங்களில் வசிக்கும் இடங்கள் பரந்து விரிவடையவும் அதிகமான வட்டாரப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆண்டு தோறும் நமது காரியக் கமிட்டி ப்பினர்கள்
மற்றும் வட்டாரப் பிரதிநிதிகள் பொதுக் கூட்டத்தில் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதும் புது காரியக் கமிட்டி நம்மால் தேர்ந்தெடுக்கப்படுவதும் நமது நடைமுறைப் பழக்கமாகும் .
சென்னை வல்லம்பர் பேரவையின் முதல் முகவரிக் கையேட்டில் சென்னை மற்றும்
அதன் சுற்றுப்புற நகரங்களில் வாழும் நம்மவர் முகவரி மட்டும் 13-08-2000 இல் ( பேரவையின் 16 ஆம்
ஆண்டு) வெளிடப்பட்டது. நமது சமுதாயத்தினர் இங்கு வந்து வாழ்வில் உயரக் காரணமான சிவத்திரு S.PR. இராமசாமி அவர்களை பாராட்டி அன்னாரின் திரு உருவப்படத்தை முகவரிக் கையேட்டின் முகப்பு ஓவியமாக வெளியிட்டு மகிழ்ந்தோம்.
நமது பேரவையின் முகவரிக் கையேட்டின் இரண்டாம் பதிப்பு 22.09.2002 இல் ( பேரவையின் 18 ஆம் ஆண்டு) சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற நகரங்களில் மற்றும் கோயம்புத்தூர், திருச்சி, மதுரை,
திருப்பூர், திண்டுக்கல், அந்தமான், பெங்களூரு போன்ற இடங்களில் வாழும் நம்மவர்களின் முகவரிகளோடு
வெளிடப்பட்டது, இரண்டாம் பதிப்பை கானாடுகாத்தான் அமரர் K.R. இராமசாமி அவர்களுக்கு சமர்ப்பணம் செய்தோம்.
சென்னை வல்லம்பர் பேரவையின் பெயர் பாலைய நாட்டு வல்லம்பர் பேரவை சென்னை என 2004ஆம் ஆண்டு மாற்றி அமைக்கப்பட்டது.
முகவரிக் கையேட்டின் மூன்றாம் பதிப்பு 26.09.2004 இல் ( பேரவையின் 20 ஆம் ஆண்டு)
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற நகரங்களில் மற்றும் மதுரை, சேலம், திருச்சி, திண்டுக்கல்,
கோயம்புத்தூர், உடுமலைப்பேட்டை, பெங்களூரு, அந்தமான், போன்ற இடங்களில் வாழும்
நம்மவர்களின் முகவரிகளோடு அயல்நாடுகளில் வாழும் நம்மவர்கள் முகவரியும் இணைத்து வெளியிடப்பட்டது.
மூன்றாம் பதிப்பில் நம்மவர்களின் முகவரிகளோடு மட்டும் நிற்காமல் பாலைய நாட்டு ஊர்களின்
ஆட்சி முறை, கரைகள், அம்பலம் ,சேர்வை ஆகியோரின் பணிகள், தெய்வ விழாக்கள், நமது சமுதாய முறைகள் சேர்க்கப்பட்டன.
முகவரிக் கையேட்டின் மூன்றாம் பதிப்பில் இராமேஸ்வரம் ஆடி அமாவாசை அன்னதானக் குழுத்
தலைவரும், அறப்பணிகளுக்கு அயராது வழங்குபவருமான கொடைவள்ளல் கோட்டையூர் திரு, சித.
.அரு.கயி அருணாசலம் அம்பலம் அவர்கள் இராமேஸ்வரம் பாலைய நாட்டு வல்லம்பர்
இல்லத்தில்அன்னதானக் கூட விரிவாக்கக் கட்டிடத்தை இலட்ச கணக்கான ரூபாய் செலவில்
நன்கொடையாக 17.௦7.2004 இல் அமைத்து கொடுத்ததை பாராட்டி அன்னாரின் திரு உருவப்படத்தை
முகப்பு ஓவியமாக வெளியிட்டு மகிழ்ந்தோம், அதே போல் பழநியில் நமது மடத்தில் அருளடியார், கி.
முருகேசனார், திருமதி, பாப்பாத்தி அம்மாள் அவர்கள் பெயரில் கவினுற அமைந்துள்ள காவடி
மண்டபம் அமைக்க ௦4.௦2.2004 இல் இலட்சக்கணக்கான ரூபாய் நமது பேரவை செயலாளர்
திரு. முரு, சோலைமலை அவர்கள் வழங்கியதைப் பாராட்டி, அருளடியார் கி. முருகேசனார் அவர்களின் திரு உருவப்படத்தையும் வெளியிட்டு மகிழ்ந்தோம்..
முகவரிக் கையேட்டின் 4 வது பதிப்பு 10.08.2008 இல் ( பேரவையின் 20 ஆம் ஆண்டு) சென்னை
மற்றும் அதன் சுற்றுப்புற நகரங்களில் வாழும் நம்மவர்களின் முகவரிகளோடும், தமிழ் நாட்டில் உள்ள
நகரங்களில் வாழும் நம்மவர்களின் முகவரிகளோடும் மேலும் இந்திய நகரங்களில் மற்றும்
அயல்நாடுகளில் வாழும் நம்மவர்கள் முகவரியும் இணைத்து வெளியிடப்பட்டது. மூன்றாம் பதிப்பில்
இருந்த பாலைய நாட்டு ஊர்களின் ஆட்சி முறை, கரைகள், அம்பலம் ,சேர்வை ஆகியோரின் பணிகள்
தெய்வ விழாக்கள் நமது சமுதாய முறைகள் அப்படியே வெளியிடப்பட்டது. நமது சமுதாயம் பற்றிய
ஆய்வு இதில் இணைக்கப்பட்டது. முகவரிக் கையேட்டின் முழுப் பயனையும் நம்மவர்கள் வெகுவாக உணர்ந்திருக்கிறார்கள்.
பாலைய நாட்டின் ஒவ்வொரு ஊரிலும் உள்ள அனைத்து பட்டதாரிகள்,செய்யும் தொழில்
உயர்பதவி வகித்தோர், தற்பொழுது உயர் பதவியிலிருப்போர் பட்டியல் சேகரித்து பிள்ளையார் கூடத்தில்
வைத்துக் கொண்டால் வரும் காலங்களில் வளரும் இளைய தலைமுறைக்கு வழிகாட்ட உதவியாக
அமையும் என்ற ஒரு விண்ணப்பத்தை வேண்டுகோளாக பாலைய நாட்டு வல்லம்பர் பேரவை. சென்னை தங்கள் முன் வைக்கிறது,
அடுத்த முயற்சியாக நம் இனத்தவரிடம் தங்கள் வீ ட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளை நமது
சமுதாயத்தை சார்ந்த அனைவருக்கும் உடனடியாக தெரியப்படுத்த இலவச குறுந்தகவல் சேவை (SMS) தொடங்கப்பட்டது. அதன் எண் 099402 47478.
அடுத்த முயற்சியாக இந்த வெப்சைட் துவக்கப்பட்டு உள்ளது. இதனை அனைவரும் உபயோகிப்போம் என நம்புகிறோம். இது நமக்கு பலன் தரும் என நம்புகிறோம் . தங்களுடைய மேலான கருத்துகளை ற்றும் ஆலோசனைகளை வரவேற்கிறோம்.
நமது Web site address:www. vallambarperavai .com
பாலைய நாட்டு வல்லம்பர் பேரவை, சென்னையின் 25 வது ஆண்டு விழா 10-10-10 அன்று மிகச் ிறப்பான முறையில் இது வரை இல்லாத அளவு உறுப்பினர் வருகையுடன் அடைமழையிலும் நடைபெற்றது.
"எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே" என்ற
நோக்கோடு இப்பேரவை துவங்கி 26 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அறிய சாதனைகள் எதுவும்
ஆற்றவில்லை என்றாலும் இதுகாறும் நமது பயணம் தொடர்ந்து மிதநடை பயில்வதே சாதனைதான்,
ஆதிக்கம் அதிகமில்லாத நாம் இதுகாறும் சாதித்ததெல்லாம், வளரும் குருத்துகளுக்கு உரமிடும் வண்ணம் அவர்கள் ஆக்கத்திற்கு ஊக்கமளிப்பது தான்.
பாலைய நாட்டு வல்லம்பர் பேரவை, சென்னையில் 26 ஆண்டுகளைக் கடந்து 50 வது ஆண்டை
நோக்கி நடை போடுகிறது .இந்தப் பாதையில் நடைபோட ஒத்துழைத்த அனைவருக்கும் எங்கள்
மனமார்ந்த நன்றிகள் . இந்தப் பாதையில் கலந்து கொண்டு வெற்றி பெற பாலைய நாட்டு வல்லம்பர் பேரவை, சென்னை நமது சமுதாயத்தினர் அனைவரின் ஒற்றுழைப்பையும் வேண்டுகிறது. |