நம் சமுதாயத்தில் ஒவ்வொரு முறைகளுக்கும் அவரவர் வசதிகளுக்கேற்ப செய்முறைகளை செய்து வருகின்றனர். மேலும் எந்த முறைக்கு என்ன செய்வு என்பது நிறைய பேருக்குத் தெரியவதில்லை. எங்கள் அறிவுக்கு எட்டிய வகையில் பல பேரின் ஆலோசனைகளைக் கேட்டு முறைகளைப் பற்றி விபரம் சேகரித்துள்ளோம். இதை தயவு கூர்ந்து நம்மவர் ஏற்றுக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இதனைப் படைக்கிறோம்.
பிள்ளை இடுக்கி கூட்டுவதற்கு:
- கழுத்துக்கு தாயத்து
- காப்பரிசி
- காதுக்கு ஒட்டு
- காலுக்கு தண்டை (கட்டாயம்)
- விளையாட்டு சாமான்கள்
- குழந்தைக்கு சட்டைத்துணி
- பவுடர்
- சோப்பு
- சீப்பு
- தாய்க்கு சேலை
- ரவிக்கைத்துணி
- தொட்டிச்சேலை
- மருந்துப்பொடி
போன்றவை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப வைக்க வேண்டியது. |