|
நம் சமுதாயத்தில் ஒவ்வொரு முறைகளுக்கும் அவரவர் வசதிகளுக்கேற்ப செய்முறைகளை செய்து வருகின்றனர். மேலும் எந்த முறைக்கு என்ன செய்வது என்பது நிறைய பேருக்குத் தெரியவதில்லை. எங்கள் அறிவுக்கு எட்டிய வகையில் பல பேரின் ஆலோசனைகளைக் கேட்டு முறைகளைப் பற்றி விபரம் சேகரித்துள்ளோம். இதை தயவு கூர்ந்து நம்மவர் ஏற்றுக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இதனைப் படைக்கிறோம்.
பெண் வயதுக்கு வந்தவுடன் : மாமன் வீட்டார் செய்ய வேண்டியது:
- களி கிண்ட தேவையான சாமான்கள்
- நாட்டுக்கோழி முட்டை
- எல்லோருக்கும் கொடுக்க டப்பா
- வெல்லம்
- நல்லெண்ணெய்,
- உ.பருப்பு
- மாலை பட்டு அவரவர் சக்திக்கு ஏற்ப
- சடங்கு சுத்த வேலிப் பருத்திக்கொடி.
- மாமன் வீட்டார் சேலை
- ரவிக்கை
- புஷ்பம்
- தேங்காய்
- பழம்
- ரொட்டி
- மிட்டாய்
- வளையல்
- சோப்பு
- சீப்பு
- ரிப்பன்
- சாந்து,
- நல்லெண்ணெய்
- உளுந்து முதலியன வாங்கிவந்து மஞ்சள் நீராட்டுவிழா நிகழ்ச்சி செய்வர்.
|