vallambar peravai
 
சீர்கொடுக்கும் (முறை கொடுக்கும்) நடைமுறை
நம் இல்லங்களில் சீர்கொடுக்கும் (முறை கொடுக்கும்) நடைமுறைகள்.
நம் சமுதாயத்தில் ஒவ்வொரு முறைகளுக்கும் அவரவர் வசதிகளுக்கேற்ப செய்முறைகளை செய்து வருகின்றனர். மேலும் எந்த முறைக்கு என்ன செய்வது என்பது நிறைய பேருக்குத் தெரியவதில்லை. எங்கள் அறிவுக்கு எட்டிய வகையில் பல பேரின் ஆலோசனைகளைக் கேட்டு முறைகளைப் பற்றி விபரம் சேகரித்துள்ளோம். இதை தயவு கூர்ந்து நம்மவர் ஏற்றுக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இதனைப் படைக்கிறோம்.

திருமணம்
மாமன் வீட்டிலிருந்து மாமன்வேவு எடுப்பதற்கு:

  • அலங்காரமலை
  • தேங்காய்
  • பழம்
  • சந்தனம்
  • மஞ்சள்
  • குங்குமம்
  • கல்கண்டு
  • சாக்லேட்
  • வெற்றிலை
  • பாக்கு
  • எலுமிச்சைபழம்
  • பூ
  • பொங்கல் வைக்கப் பச்சரிசி
  • பித்தளை சட்டி
  • பொங்கல் செம்பு
  • கரண்டி,
இவையெல்லாம் அவசியம் வைக்க வேண்டியது. மற்றவை அவரவர் சௌகரியத்தைப் பொறுத்தது. திருமணமான பெண்ணிற்கு பெண் வீட்டார் தன் வசதிக்கேற்ப சீர்கொடுப்பது கொடுப்பது நடைமுறை.

கட்டாயமாக வைக்க வேண்டியது:
  • பட்டுச் சேலை (மணவறைக்கு ஒன்று)  
  • பட்டுச் சேலை (மஞ்சள் நீராடிய பின் உடுத்த ஒன்று)
  • மற்ற சேலை குறைந்தது 11-வது வைக்கவேண்டும்.
  • அதற்கேற்ற ரவிக்கைத்துணி
  • உள்ளாடை,
  • இதர வகைகள்
  • இரண்டு பெட்ஷீட்
  • ஒரு ஜமக்காளம்
  • மெத்தை,
  • கட்டில் மற்ற வகையாறக்கள் அவரவர் வசதிக்கு ஏற்ப .

தன் வசதிக்கேற்ப வைக்க வேண்டியது:
  • நகை
  • துணிமணிகள்
  • பாத்திரங்கள்
  • கட்டில்,
  • மெத்தை,
  • பாய் ,
  • தலையணை முதலியவகைளுடன்
  • மளிகை,
  • காய்கறி வகைகள்
  • மரச்சாமன்கள்
தன் வசதிக்கேற்ப சீர்கொடுப்பது கொடுப்பது நடைமுறை.

மறுவீடு அனுப்ப:

  • யானைக்காது சட்டி 1
  • தூக்குச்சட்டி 1  
  • மறு வழிப் பலகாரம் ஸ்வீட் ஒன்று  (தேவையான எண்ணிக்கை)
  • மறு வழிப் பலகாரம் காரம் ஒன்று  (தேவையான எண்ணிக்கை)
  • ஒரு குடும்ப உபயோகத்திற்கு தேவையான சாமான்கள் மட்டும்
  • இனிப்பு: மைசூர் பாகு, லட்டு, ஜாங்கிரி இவற்றில் ஏதாவது ஒன்று 101 மட்டும்,
  • காரம் :மிச்சர் அல்லது காராபூந்தி பெரியபடிக்கு 5 படி மட்டும் (குறைந்த பட்சமாக)
  • காய்கறி 7 வகை. ஒவ்வொன்றும் ஒரு கிலோ.
இதற்கு மேல் அவரவர் செளகரியம்.

மது எடுப்பு  திருவிழா
தன் வசதிக்கேற்ப

  • வெள்ளி / எவர்சில்வர் / பித்தளைக் குடம்
  • பாளை
  • பச்சரிசி
  • காய்கறி, வகையாராக்களையும்
  • ரூபாயும் கொடுப்பார்கள்.

தலைத் தீபாவளி
தலை தீபாவளிக்குப் பெண் வீட்டார் மாப்பிள்ளை, பெண்ணை தன் வீட்டிற்கு அழைத்து வந்து
  • உரிய ஆடைகள் கொடுத்து தீபாவாளி கொண்டாடச் செய்து
  • மாப்பிள்ளை வீட்டாருக்கு தீபாவளி பலகாரம் கொடுத்து அனுப்பி
  • ரொக்கம் கொடுப்பார்கள்.

தலைக் கார்த்திகை
கார்த்திகை திருநாளன்று மாப்பிள்ளை மாமனார் வீட்டிற்கு சென்று முறை கேட்டு முறை வாங்கி கொண்டுவருவதும் நடைமுறை.



தலைப் பொங்கல்
முதல் வருட பொங்கலுக்கு பெண்வீட்டார் தன் பெண்ணுக்கு பொங்கல் வேவு வசதிக்கேற்ப

  • பொங்கல் தவலை
  • சட்டி
  • செம்பு
  • கரண்டி
  • பச்சரிசி
  • மளிகை சாமன்கள்,
  • காய்கறி
  • கரும்பு
பங்காளிகள், உறவினர்கள், நண்பர்களுடன் மாப்பிள்ளை வீட்டிற்குச் சென்று வேவுசீர் கொடுத்து விருந்து சாப்பிட்டு வருவது நடைமுறை.

தலைஆடி
திருமணம் நடந்த முதல் ஆண்டில் பெண் வீட்டார் தன் பெண்ணை ஆடிக்கு தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்து ஆடி மாதம் முடிந்ததும்

  • ஆடி பலகாரத்தை அதற்குரிய பாத்திரங்களில் நிரப்பி,
  • தேங்காய்,
  • பழம்
  • வெற்றிலை
  • பாக்கு
முதலியவகைளுடன் மாப்பிள்ளை வீட்டிற்கு சென்று ஆடி முறையை கொடுத்து பெண்ணையும் அங்கே விட்டுவிட்டு வருவது நடைமுறை.

முதல் வருட திருவிழா
மாப்பிள்ளையின் ஊரில் நடக்கும் முதல் வருட திருவிழாவிற்கு சீர் கொடுப்பார்கள்.

பெண்ணுக்கு தீர்த்தம் கொடுத்தல்:
பெண்வீட்டார் தன்னுடைய பெண் கர்ப்பவதியாகி இருந்தால் அந்த பெண்ணை தீர்த்தம் கொடுப்பதற்கென்று தன் வீட்டுக்கு அழைத்து வந்து பங்காளிகள், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்கும் சொல்லி தங்கள் குல தெய்வ கோவிலுக்குச் சென்று சுவாமியை வணங்கி அங்கிருந்து தீர்த்தம் எடுத்துவந்து வருகை தந்திருக்கும் பெண்களிடம் கொடுத்து கர்ப்பவதியான பெண்ணுக்கு கொடுப்பது நடைமுறை. இந்நிகழ்ச்சிக்கு குறைந்தது

  • 1 கிலோ மிட்டாய்
  • 1 கிலோ பிஸ்கட்
  • தேங்காய் 5
  • வெற்றிலை
  • பாக்கு
  • எலுமிச்சம் பழம் 5
  • சந்தனம்
  • மஞ்சள்
  • குங்குமம்
  • கல்கண்டு
  • பழம்
  • பூ
  • ரொட்டி வாங்கி வர வேண்டும்.
திருமணம் திருமணத்தைப் பற்றி...
 
 
 
Home l About Us l Gallery l Our Achievements l Madam Details l Performing Function l Ticket Booking l Video l Sitemap l Contact Us
© vallambar peravai, chennai 2010